About Us

அன்னை தந்த உயிரும் உடலும் தாய்மொழியாம் தமிழுக்கே எனும் எண்ணத்தோடும்,உலகம் எங்கும் தமிழனின் குரல் முலம் நம் தமிழோசை ஒலித்திட வேண்டும் என்ற பேராவலுடனும், தமிழினம் என்றும் தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் எனும் இலக்குடன் பிறந்த நம் தமிழ் குழந்தைதான் இந்த கிழக்கிந்திய நாடான இந்தோனேஷியா தமிழ்ச் சங்கம்! திரைகடலோடி திரவியம் தேட, அழகிய இந்தோனேஷியாவில் பணி நிமித்தம் ஆங்ககாங்கே குடியேறி பல இடம் சிதறிக் கிடந்த தமிழ் உள்ளங்களை ஓரிடத்தில் ஒன்றினைத்து, ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பழகிக் கொள்வதற்கு, ஒரு இணைப்பு பாலமாக செயல் படுவதுதான் பெருமையுடை நம் தமிழ் சங்கம் ! 2011 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அமைப்பு பல விதமான சோதனைகள / சாதனைகளைக் கடந்து இன்று மாபெரும் அமைப்பாக இயங்கி வருவதில் தமிழுக்கு பெருமைதான்!

இந்தோனேஷியாவிலேயே பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்களின்வாரிசுகளுக்கு தமிழ்ப்பாடங்கள் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் தமிழ் அறிவை வளர்க்கும் சேவையால் இன்று நமது தமிழ்ச் சங்கத்தின் சேவையினால் இங்கு பிறந்து வளர்ந்த நம் குழந்தைகள் தமிழ் மொழியை எழுதப் படிக்கநன்றாக அறிந்துள்ளார்கள் என்பதும் நம் தமிழ் சங்கத்தின் பெருமைதான்!

unnamed-file
  • இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களை ஒருங்கினைத்து அவர்களுக்கான ஒரு சமூக அமைப்பை உருவாக்கி அவர்களின் நலன்களுக்காக பாடுபடுதல்.
  • இந்தோனேசியத் தமிழர்களின் கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்
  • இந்தோனேசியாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் இந்தியாவில் இருந்து வந்து இங்கு பணிபுரியும் தமிழர்களையும் ஒருங்கிணைத்து செயலாற்றுதல்
  • கலாச்சார நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பரவும்வகை செய்தல்

நோக்கம்

குறிக்கோள்கள்

  • இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு உறவுப்பாலமாகவும் ஆக்கப்பூர்வமான தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு தளமாகவும் செயல்படுதல்
  • இந்தோனேசியாவில் வாழும் தமிழ் இளைஞர் சமுதாயத்தினருக்கு தமிழ்ப் பயிலும் ஆர்வத்தை ஏற்படுத்துதல். தமிழ் பள்ளி, சிறப்பு தமிழ் வகுப்பு, தமிழ் நூலகம் போன்றவற்றை தொடங்கி தமிழை பயிற்றுவித்தல்.
  • நாடகங்களையும், இ சைநிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்துதல்
    தமிழில் புத்தகங்களை வெளியிடுதல்.
  • தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கங்களை இந்தோனேசியாவிலும் பெற ஆவன செய்தல்.

நிர்வாகக் குழு

Name Designation Email id
Mr. Ramesh Ramachandran தலைவர் rameshjkt@yahoo.com
Mr. Chandrasekaran Rajalingam உபத்தலைவர் chandroomail@gmail.com
Mr. Sridhar Jayashankar செயலாளர் sridh28@gmail.com
Mr. Murali Narasimharao பொருளாளர் itsmurali87@gmail.com

Start typing and press Enter to search